புனித பயணம் மேற்கொள்ள சிறுபான்மையினருக்கு அழைப்பு
கோவை; தமிழகத்தில் உள்ள சிறுபான்மையின மக்கள், ஆன்மிக தலங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.கலெக்டர் அறிக்கை: தமிழகத்தை சேர்ந்த 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் நம் நாட்டிலுள்ள அவரவர் மதங்களுக்கான, புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ளலாம்.இதற்காக தமிழக அரசால் ஆண்டுதோறும் நபர் ஒருவருக்கு, 10,000 ரூபாய் வீதம் 120 நபர்களுக்கு 12 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் புத்த, சமண மற்றும் சீக்கியர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.இதற்கான விண்ணப்ப படிவங்களை, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து பெறலாம். www.bcmbcmw.tn.gov.inஎன்ற இணைய தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, வரும் நவ., 30க்குள் உரிய ஆவணங்களுடன் 'ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை -600 005' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.