உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆதார் முகாமில் பங்கேற்க அழைப்பு

ஆதார் முகாமில் பங்கேற்க அழைப்பு

அன்னுார்: 'ஒரு வாரம் நடைபெறும் ஆதார் முகாமில் பங்கேற்க மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பச்சாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், நேற்று ஆதார் சிறப்பு முகாம் துவங்கியது. பச்சா பாளையம் மற்றும் நாரணாபுரம் ஊராட்சி பா.ஜ., கிளைகள் சார்பில் முகாம் வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் ஆதார் அட்டையில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், போட்டோ மாற்றம், மொபைல் எண் இணைத்தல், புதிய ஆதாருக்கு விண்ணப்பித்தல் ஆகிய பணிகள் செய்யப்படும்.'எனவே, பொதுமக்கள் பங்கேற்று பயன் பெறலாம்,' என நிர்வாகிகள் தெரிவித்தனர். முகாமை பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து துவக்கி வைத்தார். தெற்கு ஒன்றிய தலைவர் ரத்தினசாமி, சக்தி கேந்திர பொறுப்பாளர் பிரகாஷ் உள்பட பல பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி