உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறப்பு முகாமில் விண்ணப்பிக்க பொது மக்களுக்கு அழைப்பு

சிறப்பு முகாமில் விண்ணப்பிக்க பொது மக்களுக்கு அழைப்பு

கோவில்பாளையம்; அத்திப்பாளையத்தில் நாளை (22ம் தேதி) 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடைபெறுகிறது.தமிழக அரசு, 'உங்களுடன் ஸ்டாலின்' என்னும் திட்டத்தை அறிவித்துள்ளது. அன்னூர் தாலுகாவில், மூன்றாவது கட்டமாக, நாளை (22ம் தேதி) அத்திப்பாளையம் மற்றும் அக்ரஹார சாமக் குளம் ஊராட்சிகளை சேர்ந்த பொது மக்களுக்கு அத்திப்பாளையத்தில் உள்ள வாரி மகாலில், காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை முகாம் நடைபெறுகிறது.இந்த முகாமில், ஊரக வளர்ச்சித் துறை, வருவாய் துறை, காவல்துறை, வேளாண் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட 15 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர். முகாமில் 46 சேவைகள் வழங்கப்பட உள்ளன.எனவே, 'பொதுமக்கள், மகளிர் உரிமைத் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, தொகுப்பு வீடு, நில அளவை, ரேஷன் கார்டு உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று விண்ணப்பித்து பயன்பெறலாம்,' என வருவாய் துறை அதிகாரிகள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி