உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மேக்கப் போட்ட மாதிரியும் போடாத மாதிரியும் இருக்கும்

 மேக்கப் போட்ட மாதிரியும் போடாத மாதிரியும் இருக்கும்

மே க்கப் போட்ட மாதிரியும் இருக்கணும், ஆனா போடாத மாதிரியும் தெரியணும்... இந்த No-Makeup -- Makeup Look -க்கு கச்சிதமாக பொருந்துவது 'லிப் டின்ட்'. கொரியன் சீரிஸ் ஹீரோயின்கள் அறிமுகப்படுத்தியது, இந்த ட்ரெண்ட் என்கிறார், அழகுகலை நிபுணர் ரம்யா. வழக்கமான லிப்ஸ்டிக் அல்லது லிப் க்ளாஸ் போடும்போது, உதட்டில் ஏதோ ஒரு மெழுகு லேயர் இருப்பதை உணரலாம். ஆனால், லிப் டின்ட் பெரும்பாலும் தண்ணீர் அல்லது ஜெல் வடிவில் இருக்கும். இதை தடவிய சில நொடிகளில், உதட்டோடு உதடாக ஊறிவிடும். நீங்கள் எதையுமே பூசவில்லை என்பது போன்ற ஒரு 'லைட்' பீலிங்கை தரும். நீண்ட நேரம் அழியாமல் இருக்கும். 3 இன் 1 மேஜிக் லிப் டின்ட்டின் மிகப்பெரிய பிளஸ் பாயின்டே, அதன் 'மல்டி பர்ப்பஸ்' பயன்பாடுதான். இதை உதட்டிற்கு பயன்படுத்தும் அதே நேரத்தில், கன்னங்களில் சிறிதளவு தடவி விரல்களால் தேய்த்தால், இயற்கையான பிளஷ் (Blush) போட்டது போல், கன்னம் சிவந்து அழகாகத் தெரியும். கண்களுக்கு மேல் ஐ -ஷேடோவாகவும் பயன்படுத்தலாம். ஒரே ஒரு சின்ன பாட்டில், முழு முகத்தையும் ஜொலிக்க வைத்துவிடும்! லிப் பாம் முக்கியம் அடர்த்தியான சிவப்பு அல்லது மெரூன் நிறங்களை விட, செர்ரி ரெட், பீச், மற்றும் இளஞ்சிவப்பு ட்ரை செய்து பாருங்கள். இயற்கையாகவே உதடு சிவந்தது போன்ற ஒரு லுக்கை தரும். லிப் டின்ட் போடுவதற்கு முன், உதட்டில் உள்ள வறட்சியை நீக்க, லிப் பாம் (Lip balm) போடுவது அவசியம். டின்ட் சீக்கிரமே காய்ந்துவிடும் தன்மை கொண்டது என்பதால், தடவிய உடனேயே விரலால் தேய்த்துவிட வேண்டும். மே க்கப் போட்ட மாதிரியும் இருக்கணும், ஆனா போடாத மாதிரியும் தெரியணும்... இந்த No-Makeup -- Makeup Look -க்கு கச்சிதமாக பொருந்துவது 'லிப் டின்ட்'. கொரியன் சீரிஸ் ஹீரோயின்கள் அறிமுகப்படுத்தியது, இந்த ட்ரெண்ட் என்கிறார், அழகுகலை நிபுணர் ரம்யா. வழக்கமான லிப்ஸ்டிக் அல்லது லிப் க்ளாஸ் போடும்போது, உதட்டில் ஏதோ ஒரு மெழுகு லேயர் இருப்பதை உணரலாம். ஆனால், லிப் டின்ட் பெரும்பாலும் தண்ணீர் அல்லது ஜெல் வடிவில் இருக்கும். இதை தடவிய சில நொடிகளில், உதட்டோடு உதடாக ஊறிவிடும். நீங்கள் எதையுமே பூசவில்லை என்பது போன்ற ஒரு 'லைட்' பீலிங்கை தரும். நீண்ட நேரம் அழியாமல் இருக்கும். 3 இன் 1 மேஜிக் லிப் டின்ட்டின் மிகப்பெரிய பிளஸ் பாயின்டே, அதன் 'மல்டி பர்ப்பஸ்' பயன்பாடுதான். இதை உதட்டிற்கு பயன்படுத்தும் அதே நேரத்தில், கன்னங்களில் சிறிதளவு தடவி விரல்களால் தேய்த்தால், இயற்கையான பிளஷ் (Blush) போட்டது போல், கன்னம் சிவந்து அழகாகத் தெரியும். கண்களுக்கு மேல் ஐ -ஷேடோவாகவும் பயன்படுத்தலாம். ஒரே ஒரு சின்ன பாட்டில், முழு முகத்தையும் ஜொலிக்க வைத்துவிடும்! லிப் பாம் முக்கியம் அடர்த்தியான சிவப்பு அல்லது மெரூன் நிறங்களை விட, செர்ரி ரெட், பீச், மற்றும் இளஞ்சிவப்பு ட்ரை செய்து பாருங்கள். இயற்கையாகவே உதடு சிவந்தது போன்ற ஒரு லுக்கை தரும். லிப் டின்ட் போடுவதற்கு முன், உதட்டில் உள்ள வறட்சியை நீக்க, லிப் பாம் (Lip balm) போடுவது அவசியம். டின்ட் சீக்கிரமே காய்ந்துவிடும் தன்மை கொண்டது என்பதால், தடவிய உடனேயே விரலால் தேய்த்துவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை