உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 5,636 பேருக்கு ரூ.32 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி: கூடுதலாக தனிநபர் பாதுகாப்பு பெட்டக வசதி அறிவிப்பு

5,636 பேருக்கு ரூ.32 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி: கூடுதலாக தனிநபர் பாதுகாப்பு பெட்டக வசதி அறிவிப்பு

கோவை::தமிழக அரசின் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், 5,636 வாடிக்கையாளர்களுக்கு ரூ.32.11 கோடி அளவில், தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட, 270 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உட்பட, மொத்தம் 1,085 கூட்டுறவு சங்கங்களும், 39 மத்திய வங்கி கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.

மூலதனக்கடன் ரூ.135 கோடி

கடந்தாண்டு ஏப்., முதல் நடப்பு மார்ச் 31 வரையான நிதியாண்டில், வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் விவசாயிகள் என, 65 ஆயிரத்து 115 பயனாளிகளுக்கு ரூ.807.33 கோடி பயிர்க்கடன், 18 ஆயிரத்து 129 பேருக்கு கால்நடை பராமரிப்பு மூலதனக் கடனாக, ரூ.135.88 கோடி வழங்கப்பட்டுள்ளது.நேரடி மத்திய காலக் கடனாக, 278 பேருக்கு ரூ.4.03 கோடி, நகைக் கடனாக 50 ஆயிரத்து 599 பேருக்கு ரூ.654.12 கோடி, வீட்டு வசதிக் கடனாக, 124 பேருக்கு ரூ.15.09 கோடி, வீட்டு அடமானக் கடனாக, 248 பேருக்கு ரூ.21.46 கோடி, மகளிர் சுய உதவிக்குழு கடனாக 909 குழுவுக்கு, ரூ.74.96 கோடி, மாற்றுத் திறனாளிகள் கடனாக, 114 பேருக்கு ரூ.2.32 கோடி வழங்கப்பட்டுள்ளது.

சிறு வியாபாரிகளுக்கும் கடன்

டாப்செட்கோ கடனாக, 127 பயனாளிகளுக்கு ரூ.0.83 கோடி, டாம்கோ கடனாக 141 பேருக்கு ரூ.1.21 கோடியும், ஆதரவற்ற கைம்பெண், கணவரை இழந்தவர்களுக்கு கடனாக, 300 பேருக்கு ரூ.1.34 கோடி, கல்விக் கடனாக 79 பேருக்கு ரூ.0.54 கோடி, சிறு வியாபாரிகளுக்கு கடனாக, 1,921 பேருக்கு ரூ.10.99 கோடி வழங்கப்பட்டுள்ளது.விவசாயிகள் தங்களின் பயிர்களை பாதுகாத்து வைக்க ஏதுவாக, சரக்கீட்டு கடனாக 497 பேருக்கு ரூ.27.61 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் பயிர்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ், 51 ஆயிரத்து 660 பேருக்கு, ரூ.614.72 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நகைக்கடன் தள்ளுபடி

தமிழக அரசின் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், 5,636 வாடிக்கையாளர்களுக்கு, ரூ.32.11 கோடி அளவில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசின் மகளிர் சுய உதவிக் கடன்கள், 3,888 குழுவுக்கு ரூ.76.83 கோடியளவில் குழுக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.தற்போது, தமிழக அரசு கூட்டுறவு துறையின், 2025-26ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில், கூடுதலாக தனிநபர் பாதுகாப்பு பெட்டக வசதி தனியாக அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தகவலை, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ