உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஜாங்கிரி அலங்காரம்

ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஜாங்கிரி அலங்காரம்

மேட்டுப்பாளையம் : சிறுமுகை அருகே உள்ள அபீஷ்ட வரத ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, 1008 ஜாங்கிரியால் சுவாமியை அலங்கரித்து, விசேஷ சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.சிறுமுகை அடுத்த பொகலூர் அருகே, தாளத்துறை டி.ஆர்.எஸ்., ஹைவே சிட்டி குடியிருப்பு பகுதியில், அபீஷ்ட வரத ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது.இங்கு ஒவ்வொரு சனிக்கிழமையும், ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. நேற்று புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.காலை, 5:00 மணிக்கு கோவில் நடை திறந்து, சுப்ரபாதத்துடன் விழா துவங்கியது. ஸ்தபந திருமஞ்சனம், சுதர்ஸன ஹோமம் ஆகிய பூஜைகள் செய்யப்பட்டன.அடுத்து ஆஞ்சநேயருக்கு, புதிய வஸ்திரம் மற்றும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1008 ஜாங்கிரியால் சுவாமிக்கு அலங்காரம் செய்தனர்.இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தாஸன் ரிஷி பட்டர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை