உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பஸ்சில் கடி பயணிகள் அவதி

அரசு பஸ்சில் கடி பயணிகள் அவதி

கோவை : கோவையிலிருந்து ஈரோடு செல்லும் நெடுந்துார அரசு பஸ்ஸில், மூட்டை பூச்சி தொல்லை தாங்கமுடிவதில்லை என்று, பயணிகள் குமுறுகின்றனர்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், கோவையிலிருந்து அன்றாடம் ஈரோடு வரை, பாயின்ட் டூ பாயின்ட் பஸ் எண்: டி.என்.,33என் 3328 என்ற பஸ்சை இயக்குகிறது. பராமரிப்பு மிகவும் மோசம். இதனால், இருக்கைகளில் ஏராளமான மூட்டை பூச்சிகள் கொத்துக்கொத்தாக உள்ளன. பயணிகளை கடித்து துன்புறுத்துகின்றன. இதை, வீடியோ எடுத்து போக்குவரத்துக்கழக பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ளனர் பயணிகள். ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ