உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கந்த சஷ்டி திருவிழா: காப்பு கட்டுதல் துவக்கம் 

கந்த சஷ்டி திருவிழா: காப்பு கட்டுதல் துவக்கம் 

கோவை: கந்த சஷ்டி திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான காப்புகட்டுதல் நிகழ்ச்சி, சுக்கிரவார்பேட்டை பாலமுருகன் கோயிலில் நேற்று துவங்கியது. காலை 6 மணிக்கு, கருவறையிலுள்ள பாலதண்டாயுதபாணி சுவாமிக்கும், உற்சவர் சுப்ரமணிய சுவாமிக்கும், சகல திரவிய அபிஷேகம் நடந்தது. ஏழு மணிக்கு சுவாமிக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து, பக்தர்களுக்கு சிவாச்சாரியார்கள் காப்பு கட்டிவிட்டனர். கந்த சஷ்டி விழா நிறைவடையும், அக்., 29 வரை மாலை 6:30 மணிக்கு, கோயில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெறும். பக்தர்கள் வழிபாடுகளில் பங்கேற்க, கோயில் நிர்வாகம் வேண்டு கோள் விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி