உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தென் மேற்கு பல்கலைகள் இடையே கராத்தே; எதிராளிகளை வந்து பார் என்று அசத்திய பாரதியார் பல்கலை

தென் மேற்கு பல்கலைகள் இடையே கராத்தே; எதிராளிகளை வந்து பார் என்று அசத்திய பாரதியார் பல்கலை

கோவை; தென் மேற்கு மண்டல பல்கலைகளுக்கு இடையேயான கராத்தே போட்டியில் பாரதியார் பல்கலை அணி வீரர், வீராங்கனைகள், 14 பேர் வெற்றி பெற்று, தேசிய போட்டிக்கு தகுதிபெற்றனர்.தென் மேற்கு மண்டல பல்கலைகளுக்கு இடையேயான கராத்தே போட்டி மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் வீரர்களுக்கும், சென்னையில் வீராங்கனைகளுக்கும் சமீபத்தில் நடந்தது.இரு போட்டிகளிலும், 100க்கும் மேற்பட்ட பல்கலைகளை சேர்ந்த, 1,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.இதற்கென, பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரி மாணவ, மாணவியருக்கு கராத்தே தெரிவுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். போபாலில் எட்டு வீரர்கள் அடங்கிய அணியும், அதேபோல், சென்னையில், 9 வீராங்கனைகள் அடங்கிய அணியும் பங்கேற்றன.தனிநபர் கட்டா, தனிநபர் சண்டை, அணி கட்டா மற்றும் அணி சண்டை ஆகிய நான்கு பிரிவுகளில் வீரர், வீராங்கனைகள் அசத்தினர்.வீரர்கள் நவீன், விஷ்ணு வர்தன், வினித், லீலா கிருஷ்ணன், பரத், ஹரி பிரகாஷ், கிருத்திக், தனுபவ் வெற்றி பெற்றனர்.வீராங்கனைகள், பாலரக்ஷிகா, வேதவர்ஷினி, மனுசா தேவி, தன்யா ஸ்ரீ, எப்சிதா போஸ், கீர்த்தி ஜான்கித் ஆகியோர் வெற்றி பெற்று, பல்கலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.அணி சண்டைப் பிரிவில், தேசிய போட்டிக்கு தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ள ஒரே அணி என்ற பெருமை, இப்பல்கலைக்கு கிடைத்துள்ளது.இவர்கள், ஹரியானாவில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கின்றனர். வீரர், வீராங்கனைகளை, பல்கலை நிர்வாகத்தினர், அணி பயிற்சியாளர் சிவசண்முகம் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை