உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்ஜி., கல்லுாரியில் கார்கில் விஜய் திவஸ்

இன்ஜி., கல்லுாரியில் கார்கில் விஜய் திவஸ்

பெ.நா.பாளையம்; வட்டமலைபாளையம் ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில், கார்கில் விஜய் திவஸ் நிகழ்ச்சி நடந்தது. இதில், கார்கில் யுத்தத்தில் தங்கள் உயிரை அர்ப்பணித்த வீரர்களின் தியாகம் மற்றும் ஒவ்வொரு இந்தியனின் மனதில் பெருமை சேர்த்த நாளாக நினைவு கூறப்பட்டது. இந்நிகழ்வில், ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் சவுந்தரராஜன், என்.சி.சி., அதிகாரி ரமேஷ், பேராசிரியர்கள் மற்றும் என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்றனர். கார்கில் போரில் தங்கள் உயிரை நீத்த வீரர்களின் உருவப்படங்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை