உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கே.பி.ஆர்., கல்லுாரி பட்டமளிப்பு விழா

கே.பி.ஆர்., கல்லுாரி பட்டமளிப்பு விழா

கோவை : கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியின், 11வது பட்டமளிப்பு விழா கல்லுாரி அரங்கில் நடந்தது. 756 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர். கே.பி.ஆர்., குழுமத்தின் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். டெவலப்மென்ட் பேங்க் ஆப் சிங்கப்பூரின் துணைத்தலைவர் லிஜேஷ் முகுந்தன், பட்டங்களை வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், ''தொழில்நுட்ப வளர்ச்சியில் பொறியாளர்களின் பங்கு இன்றியமையாதது. வளர்ச்சிக்கு ஏற்ப மாணவர்கள் தங்கள் திறன்களை, 'அப்டேட்' செய்து கொள்ள வேண்டும்,'' என்றார். இளநிலை பிரிவில், 704 பேர், முதுநிலை பிரிவில் 52 பேர் உட்பட 756 பேர் பட்டங்களை பெற்றனர். முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. இதில், ஜிம்பாப்வே நாட்டின் இந்திய துாதர் ஸ்டெல்லா என்கோமோ, முதல்வர் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முதல்வர் முனைவர் சரவணன், ஆண்டறிக்கை வாசித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை