உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஐயப்ப சுவாமி கோவிலில் இன்று கும்பாபிேஷகம்

ஐயப்ப சுவாமி கோவிலில் இன்று கும்பாபிேஷகம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி ஐயப்ப சுவாமி, மஞ்சள் அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா இன்று நடக்கிறது.பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற, ஐயப்ப சுவாமி, மஞ்சள் அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா, கடந்த, 14ம் தேதி மஹா கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள், ேஹாமங்கள் நடைபெற்று வருகின்றன.நேற்று காலை நான்காம் கால யாகம், மாலையில் ஐந்தாம் கால யாக பூஜை நடந்தது. இரவு, 8:30 மணிக்கு ரக் ஷா பந்தனம், லட்சுமி பூஜை, இரவு, 9:00 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இன்று (20ம் தேதி) காலை, 5:30 மணிக்கு ஆறாம்கால யாக பூஜை, காலை, 8:30 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, மஹாதீபாராதனை, காலை, 8:45 மணிக்கு யாத்ரா கடம் புறப்பாடு நடக்கிறது. காலை, 9:25 மணி முதல், 10:00 மணிக்குள் மஹா கும்பாபிேஷக விழா, தசதானம், தசதரிசனமும், காலை, 11:00 மணிக்கு மஹா அபிேஷகம், காலை, 9:00 மணிக்கு அன்னதானம், மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

விழாக்கோலம்

ஐயப்பன் கோவில் கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு, கோவில் வளாகம் முழுவதும் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. தினமும் ேஹாம பூஜைகள் நடைபெறுவதுடன், பக்தர்கள் கூட்டமும் அதிகமாக வந்து செல்வதால், விழாக்கோலம் பூண்டுள்ளது.கும்பாபிேஷக விழாவையொட்டி ஐயப்பன் கோவில் அருகே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டுநர்கள் மாற்று வழித்தடத்தில் செல்ல போலீசார் அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி