உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சித்தி விநாயகர் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்

சித்தி விநாயகர் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, சித்தி விநாயகர் கோவிலில் இன்று கும்பாபிேஷகம் நடக்கிறது.பொள்ளாச்சி அருகே, ஆச்சிப்பட்டி சங்கம்பாளையம் என்.ஜி.ஓ., காலனி சித்தி விநாயகர் கோவிலில், 30ம் ஆண்டு பொன் விழா மற்றும் கும்பாபிேஷகம் இன்று நடக்கிறது.விழாவை முன்னிட்டு, நேற்று முளைப்பாரி கொண்டு வருதல், விநாயகர் பூஜை, புண்யாகவாசனம், கணபதி, நவக்கிரக ேஹாமம், பஞ்சகவ்ய பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து, சித்தி விநாயகருக்கு, தெய்வகுளம் காளியம்மன் கோவில் சென்று தீர்த்தம் எடுத்து வருதல், முதற்கால யாக பூஜை, பூர்ணாஹூதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.இன்று காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, காலை, 9:15 மணி முதல், 10:15 மணி வரை பூர்ணாஹூதி, விமான கும்பாபிேஷகம், மூலவர் கும்பாபிேஷகம், காலை, 10:15 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.காலை, 11:15 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ