உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கருப்பராய சுவாமி கோவிலில் வரும் 18ல் கும்பாபிேஷகம்

கருப்பராய சுவாமி கோவிலில் வரும் 18ல் கும்பாபிேஷகம்

ஆனைமலை; ஆனைமலை அடுத்த வீரல்பட்டியில், கன்னிமார், விநாயகர், முருகர், கருப்பராய சுவாமி கோவில், கும்பாபிேஷக விழா வரும், 18 ம்தேதி நடக்கிறது. அதற்காக, வரும், 17ம் தேதி மாலை 4:00 திருவிளக்கு, புனிதநீர், பிள்ளையார் வழிபாடு மற்றும் விமான கலசம் நிறுவுதல் நடக்கிறது.அன்று, மாலை, 5:00 மணிக்கு, மூலத் திருமேனிகள் திருக்குடங்களை இடமாக கொண்டு வேள்வி சாலையில் எழுந்தருளல், மாலை, 6:00 மணிக்கு முதற்கால வேள்வி, இரவு, 8:00 மணிக்கு மூலத்திருமேனிகளுக்கு எண் வகை மருந்து சாற்றுதல் நடக்கிறது. வரும், 18ம் தேதி காலை, 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6:00 மணிக்கு இரண்டம் கால வேள்வி, 7:00 மணிக்கு வேள்வி நிறைவு, திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு நடக்கிறது.அதன்பின், திருக்குடங்கள் புறப்பாடு, காலை, 8:00 மணிக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு திருமஞ்சன அலங்காரம், பேரொளி வழிபாடு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை