உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேக விழா

அன்னுார், ; அல்லிகுளம், புது காலனியில், மாகாளியம்மன் கோவிலுக்கு, சிற்ப சாஸ்திரப்படி ஆலயம் அமைக்கப்பட்டு பஞ்சவர்ணம் தீட்டப்பட்டுள்ளது. இதே வளாகத்தில், செல்வ விநாயகர் கோவிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.திருப்பணி முடிந்ததையடுத்து, கும்பாபிஷேக விழா வரும் மே 3ம் தேதி காலை 7:30 மணிக்கு திருவிளக்கு பூஜையுடன் துவங்குகிறது. வரும் 4ம் தேதி, அதிகாலையில் இரண்டாம் கால வேள்வி பூஜை நடக்கிறது. காலை 7:30 மணிக்கு, மாகாளியம்மன் மற்றும் செல்வ விநாயகருக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை