உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தொழிலாளர் சம்பள பிரச்னை: இன்று நடக்குது பேச்சுவார்த்தை

 தொழிலாளர் சம்பள பிரச்னை: இன்று நடக்குது பேச்சுவார்த்தை

வால்பாறை: தொழிலாளர்களுக்கு ஒப்பந்தப்படி சம்பளம் வழங்காத எஸ்டேட் நிர்வாகத்தை கண்டித்து நடைபெறுவதாக இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. வால்பாறை இதய தெய்வம் தோட்ட தொழிலாளர் சங்க (ஏ.டி.பி.,) தலைவர் அமீது அறிக்கையில் கூறியிருப்பதாவது: தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, தமிழ்நாடு தோட்ட அதிபர் சங்கம், ஆனைமலை தோட்ட அதிபர் சங்கம் (ஏ.பி.ஏ), நீலகிரி, வயநாடு தோட்ட அதிபர் சங்கம் ஏற்படுத்திக்கொண்ட இருதரப்பு ஒப்பந்த பேச்சு வார்த்தையின் படி, கடந்த, ஜூலை 1ம் தேதி முதல் தினக்கூலியாக, 475 ரூபாய் வழங்கப்படுகிறது. ஏ.பி.ஏ., உறுப்பினர் தோட்டங்களில் மட்டுமே இந்த சம்பளம் வழங்கப்படுகிறது. மற்ற, 10 எஸ்டேட்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இன்று வரை ஒப்பந்தப்படி சம்பளம் வழங்கவில்லை. அதே போல், 2021ல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தபடி தொழிலாளர்களுக்கு நிலுவைத்தொகையும் வழங்கவில்லை. தற்போதைய ஒப்பந்தப்படி சம்பளம் வழங்குவதோடு, பணப்பலன்களையும் வழங்க வேண்டும். எஸ்டேட் நிர்வாகங்கள் அத்தொகையை வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை கோவையில் பேச்சு வார்த்தை நடக்கிறது. இதில், ஒன்பது தொழிற்சங்கங்கள் கலந்து கொள்கின்றன. பேச்சு வார்த்தைக்கு பின் போராட்டம் அறிவிக்கப்படும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை