உள்ளூர் செய்திகள்

கடன் வழங்கும் முகாம்

கோவை;கோவை மாவட்டத்தில் புதிய தொழில் துவங்கவும், ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்த விரும்பும் தொழில் முனைவோர் இன்று நடக்கும் கடனுதவி முகாமில் பங்கேற்கலாம்.கோவையில் வசிப்போர் தொழில் துவங்குவோர்,தொழிலை விரிவுபடுத்துவோர், வங்கிகளின் வாயிலாக எளிதாக கடனுதவி பெறும் வகையில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று சிறப்பு முகாம் நடக்கிறது.காலை 10:00 மணிக்கு முகாம் துவங்குகிறது. கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகிக்கிறார். இதில் அனைத்து வங்கிகளின் மண்டல அலுவலர்கள், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், கிளை மேலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இதில் தொழில் துவங்குபவர்கள், விரிவுபடுத்துபவர்கள் தொழில் கடன் பெற உதவிகளையும், தொழில்துவங்க ஆலோசனைகளையும் பெற்று பயனடையலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை