மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
04-Oct-2025
பொள்ளாச்சி: ஆனைமலை, குப்பிச்சிபுதுார் பகுதியில் சுற்றி வரும் சிறுத்தையை, கூண்டு வைத்து பிடிக்க, வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து, ஐந்து கி.மீ., தொலைவில் குப்பிச்சிபுதுார் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள தனியார் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக, அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய மூன்று வெவ்வேறு இடங்களில் கண் காணிப்பு கேமரா பொருத்தி, அதன் பதிவுகள் பரிசோதிக்கப்பட்டு வந்தது. அவ்வகையில், ஒரு கேமராவில், நேற்று முன்தினம் இரவு, சிறுத்தை நடமாட்டம் பதிவானது. இதையடுத்து, மக்கள் பாதுகாப்பு கருதி, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க, பொள்ளாச்சி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், 'சிறுத்தையின் காலடித்தடங்கள் எந்தெந்த பகுதியில் அதிகளவில் உள்ளன என்பதை வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். அதற்கேற்ப, கூண்டு வைக்கப்படும். கிராமத்துக்கும், புலிகள் காப்பகத்திற்கும் இடையே அடர்ந்த வருவாய் நிலப் பகுதி இருப்பதால், சிறுத்தை உணவு தேடி இடம் பெயர்ந்திருக்கலாம். மக்களின் பாதுகாப்பு கருதி, சிறுத்தையை விரைந்து பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது,' என்றனர்.
04-Oct-2025