உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்: கோவை அ.தி.மு.க., பிரசாரம்

 கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்: கோவை அ.தி.மு.க., பிரசாரம்

பெ.நா.பாளையம்: கேரளாவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, அ.தி.மு.க.,வினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்டமாக, திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மாவட்டங்களில் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. இரண்டாம் கட்டமாக திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் வரும் 11ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் பாலக்காடு மாவட்டம், சோலையூர் ஊராட்சி, 1வது வார்டு வேட்பாளர் பழனிச்சாமிக்கும், அகழி ஊராட்சி, 5வது வார்டு வேட்பாளர் பழனிக்கும் ஆதரவாக, கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அருண் குமார் மற்றும் அ.தி.மு.க.,வினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி