கிறிஸ்துவ போதகருக்கு லுக் அவுட் நோட்டீஸ்
கோவை:போக்சோ வழக்கில், தலைமறைவாக உள்ள போதகர் ஜான் ஜெபராஜ், வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க, போலீசார் 'லுக் அவுட் நோட்டீஸ்' வழங்கியுள்ளனர்.ஆடல், பாடல் என இசைக்கச்சேரி போல, ஜெபக்கூட்டம் நடத்தி அதை இணையத்தில் பதிவேற்றம் செய்து பிரபலம் ஆனவர், போதகர் ஜான் ஜெபராஜ். இவருக்கு, தன் சர்ச்சுக்கு வரும் பெண்களுடன், கள்ள தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. மனைவியை பிரிந்து சென்ற அவர், 17 மற்றும் 14 வயது சிறுமியர் இருவருக்கு, பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக, சில நாட்களுக்கு முன், கோவை மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இதனால், தலைமறைவான அவரை கைது செய்ய, மூன்ற தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், ஜான் ஜெபராஜ் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல வாய்ப்பிருப்பதால், அவ்வாறு அவர் செல்லாமல் இருக்க, கோவை போலீசார் அவருக்கு எதிராக, லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து, அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பியுள்ளனர்.