மேலும் செய்திகள்
குப்பை கொட்டுகிறார்களா.. ஆதாரம் கொடுத்தால் பரிசு
29-Mar-2025
கருமத்தம்பட்டி : பெங்களூருவில் இருந்து பொள்ளாச்சிக்கு தேங்காய் மட்டை லோடு ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி லாரி ஒன்று வந்தது. ஜெகதீஷ் குமார்,45 லாரியை ஓட்டி வந்தார். நேற்று காலை, கருமத்தம்பட்டி அருகே அவிநாசி ரோடு மேம்பாலத்தின் மீது வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, பக்கவாட்டு தடுப்பு சுவர் மீது மோதியவாறே, 100 மீ., தூரத்துக்கு சென்று, சாய்ந்து நின்றது. 40 அடி உயரமுள்ள மின் விளக்கு கம்பம் முறிந்து, கீழே உள்ள சர்வீஸ் ரோட்டில் சாய்ந்தது.லாரியில் இருந்த தென்னை மட்டைகள், கீழே விழுந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை. டிரைவர் போதையில் லாரியை ஓட்டியதால் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
29-Mar-2025