உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏல விற்பனையில் தேங்காய் வரத்து குறைவு

ஏல விற்பனையில் தேங்காய் வரத்து குறைவு

அன்னூர்; அன்னூர், சத்தி ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வேளாண் விளை பொருட்கள் வாராந்திர ஏல விற்பனை நடைபெறுகிறது. நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் 6,349 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்சமாக 60 ரூபாய் முதல் அதிகபட்சமாக 69 ரூபாய் 20 பைசா வரை விற்பனையானது. தேங்காய் பருப்பு 20 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. குறைந்தபட்சமாக ஒரு கிலோ 220 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 241 ரூபாய் 9 பைசாவுக்கும் விற்பனையானது. 57 விவசாயிகள் பங்கேற்றனர். கடந்த வாரத்தை விட தேங்காய் வரத்து குறைவாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை