உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தினமும் வாசிக்கும் பழக்கம் வேண்டும்

தினமும் வாசிக்கும் பழக்கம் வேண்டும்

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நகராட்சி அறிவுசார் மையத்தில், பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பு நடத்தப்பட்டது. இதில் காரமடை எஸ்.வி.ஜி.வி. பள்ளியை சேர்ந்த, 119 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு நகராட்சி கமிஷனர் அமுதா தலைமை வகித்தார்.நகர் மன்ற தலைவர் மெஹரிபா பர்வின் துவக்கி வைத்து பேசுகையில், ''மாணவர்கள் பள்ளி பாடப் புத்தகங்களை படிப்பதோடு, தினமும் ஏதாவது ஒரு புத்தகங்களை, படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.இதன் வாயிலாக தங்களுடைய பொது அறிவை உயர்த்திக் கொள்ள முடியும். சிறுவயதில் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொண்டால், இளைஞர்களாக வளரும் பொழுது, அதிகமான புத்தகங்களை உங்களால் படிக்க முடியும். அப்போது போட்டித் தேர்வுகளை எளிதாக எழுத முடியும்,'' என்றார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் அருள்வடிவு, ஓய்வு பெற்ற அலுவலர்கள் ராஜாமணி, மணி, எம்.சு மணி ஆகியோர் பேசினர். இதற்கான ஏற்பாடுகளை நுாலகர் பவித்ரா, மாரிமுத்து ஆகியோர் செய்து இருந்தனர். நகராட்சி பணியாளர் ஜெயராமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ