உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்கிம்மர் கருவி மூலம் திருடியவருக்கு சிறை

ஸ்கிம்மர் கருவி மூலம் திருடியவருக்கு சிறை

கோவை; கோவையில், ஏ.டி.எம்.,களில் ஸ்கிம்மர் கருவி மூலம், ரூ.41 லட்சம் திருடியவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை, ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது. இலங்கை வல்வெட்டிதுரையைச் சேர்ந்தவர் லவசாந்தன், 36. 2017ம் ஆண்டு, கோவையில் உள்ள வங்கி ஏ.டி.எம்.,களில், சிறிய அளவில் 'ஸ்கிம்மர்' கருவி பொருத்திய இவர், வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம்., கார்டு விபரங்களை சேகரித்தார். அதன் மூலம், போலி ஏ.டி.எம்., கார்டு தயாரித்து, 61 வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.41 லட்சத்தை திருடினார். கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, லவசாந்தனை சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை, கோவை ஜே.எம்., 4 நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. லவசாந்தனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை, ரூ.2,000 அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் அருண்குமார் தீர்ப்பளித்தார். லவசாந்தன் மீது சென்னை, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டு கைதிகள் உள்ள முகாமிற்கு அழைத்துச் செல்லப் பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !