பாம்பு பிடிக்க சென்றவர் பலி
கோவை; சின்னவேடம்பட்டி, அஞ்சுகம் நகரை சேர்ந்தவர் கார்த்திக்,38; இவரது பக்கத்து வீட்டில் ராஜா என்பவர் வசிக்கிறார். ராஜா வீட்டுக்குள் பாம்பு புகுந்தது. அதை பிடிக்கச்சென்ற கார்த்திக், பிளாஸ்டிக் கவரில் போட்டு, பாம்பை எடுத்துச் சென்றபோது, கை விரலில் கடித்தது. அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்; செல்லும் வழியிலேயே இறந்தார். சரவணம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.