உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்று மருத்துவ முகாம்

இன்று மருத்துவ முகாம்

சூலுார்: செஞ்சேரிமலையடி பாளையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடக்கிறது. சு ல்தான்பேட்டை ஒன்றியம், செஞ்சேரி மலையடிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடக்கிறது. காலை, 9:00 முதல், மாலை, 4:00 மணி வரை நடக்கும் முகாமில், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகளிர் மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவ பரிசோதனை நடக்கிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் பெறவும், முதல்வர் காப்பீடு திட்ட விண்ணப்பிக்கவும் இம்முகாமில் மக்கள் பங்கேற்று பயன் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி