உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் சத்தமின்றி பிரபலமாகி வரும் பிக்கில் பால் விளையாட்டு

கோவையில் சத்தமின்றி பிரபலமாகி வரும் பிக்கில் பால் விளையாட்டு

வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடிய நம் 80ஸ், 90ஸ் கிட்ஸ்கள் கிட்டிப்புள், பச்சைக்குதிரை, காற்றாடி, பம்பரம், கூட்டாஞ்சோறு, ஆடுபுலி ஆட்டம் போன்ற விளையாட்டுக்கள் இன்றைய பிள்ளைகளுக்கு தெரியவாய்ப்பில்லை. எலக்ட்ரானிக் கேம்ஸ் அதிகமாக விளையாடும் குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களையும் ஈர்க்கும் வகையில், கோவையில் சமீபத்தில் சத்தமின்றி பிரபலமாகி வருகிறது, 'பிக்கில் பால்' எனும் ஒரு புதிய விளையாட்டு. இதற்கு பெரிய பயிற்சி ஏதும் தேவையில்லை என்பதால், பலர் விரும்பி விளையாடுவதை காணமுடிகிறது. கோவையில் பீளமேடு, விளாங்குறிச்சி, சங்கனுார், ஒண்டிபுதுார் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், இதற்கான பயிற்சிகளும் துவக்கப்பட்டுள்ளன. கோவை ட்ரூ பவுன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் இளங்கோ ரங்கநாதன் கூறியதாவது: 1995ம் ஆண்டு முதல், அனைத்து வகை விளையாட்டு மைதானங்கள் நாடு முழுவதும் அமைத்து கொடுத்து வருகிறோம். சமீபகாலமாக, பிக்கில் பால் கோர்ட் அமைக்க விளையாட்டு பயிற்சி மைதானங்கள் மட்டுமின்றி, பள்ளி, கல்லுாரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வர்த்தக ரீதியாக குடியிப்பு பகுதிகளுக்கு நடுவில் உள்ள காலியிடங்கள் என, பல இடங்களில் அமைத்து வருகிறோம். பிக்கில் பால் டென்னிஸ், பேட்மிட்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகிய மூன்று விளையாட்டுக்களும் கலந்த ஒன்றாக உள்ளது. டென்னிஸ் கோர்ட் அமைக்க 7,200 சதுர அடி தேவை; இதே இடத்தில் நான்கு பிக்கில் பால் கோர்ட் அமைத்துவிட முடியும். 16க்கு 30 என்ற இடம் இருந்தால் போதுமானது. இருவர் அல்லது நான்கு பேர் விளையாடும் இந்த விளையாட்டை, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எளிதாக கற்றுக்கொள்ள முடியும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை