மேலும் செய்திகள்
அரசு, தனியார் பஸ்களுக்கு ஆர்.டி.ஓ., எச்சரிக்கை
20-Jun-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சர்வீஸ் ரோடு விரிவாக்க பணிகளை, எம்.எல்.ஏ., தாமோதரன் ஆய்வு செய்தார்.கிணத்துக்கடவு, காய்கறி மார்க்கெட் அருகே (கோவை செல்லும் வழி) சர்வீஸ் ரோடு குறுகலாக இருந்தது. இந்த வழித்தடத்தில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் பயணிக்கும் நிலையில், 'ஒன்வே' திசையில் அண்ணாநகர், பகவதிபாளையம், கல்லாங்காட்டுப்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது.இத்துடன், சர்வீஸ் ரோடு ஆங்காங்கே சேதமடைந்து இருப்பதால் இவ்வழியில் செல்லும் அனைத்து மக்களும் சிரமப்பட்டு வந்தனர். மேலும், சர்வீஸ் ரோட்டை அகலப்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வந்தனர்.இதை தொடர்ந்து, சர்வீஸ் ரோட்டோரம் டி.இ.எல்.சி., பள்ளிக்கு சொந்தமான இடம் உள்ளது. தற்போது ரோடு அமைக்க பள்ளி சுற்றுச்சுவர் அகற்றப்பட்டுள்ளது. இதை கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் ஆய்வு செய்தார். விரைவில் ரோடு பணிகள் மேற்கொள்ளவும், கால்வாய் அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ., கூறினார்.
20-Jun-2025