உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மப்டி போலீஸ் - பஸ் டிரைவர் தகராறு; குன்னுாரில் போக்குவரத்து நெரிசல்

மப்டி போலீஸ் - பஸ் டிரைவர் தகராறு; குன்னுாரில் போக்குவரத்து நெரிசல்

ஊட்டி; அரசு பஸ் டிரைவருடன் 'மப்டியில்' இருந்த போலீஸ் தகராறில் ஈடுபட்டதால், ஊட்டி- குன்னுார் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இருந்து பாலக்காடுக்கு நேற்று காலை அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஊட்டி- குன்னுார் சாலையில் நொண்டிமேடு பகுதியில் சென்றபோது, அரசு பஸ் சற்று வேகமாக சென்று உள்ளது. அப்போது, எதிரே வந்த ஒரு இரு சக்கர வாகனத்தின் மீது மோதுவது போல், அரசு பஸ் சென்றதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த, 'மப்டி'யில் காரில் வந்த போலீசார் சிலர், பஸ்சின் முன் பகுதியில் காரை நிறுத்தினர். அப்போது, அரசு பஸ் டிரைவருக்கும், மப்டியில் இருந்த போலீஸ் அருண் என்பவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அரசு பஸ் டிரைவரை போலீஸ் தாக்கியதாக தெரிகிறது. இந்த பிரச்னையால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நீண்ட துாரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சூழ்நிலையை உணர்ந்த போலீஸ், டிரைவரிடம் வருத்தம் தெரிவித்ததால் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டது. இந்த பிரச்னையால் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ