உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விபத்தில்லா நகரை உருவாக்க நகராட்சி அதிகாரிகள் உறுதியேற்பு

விபத்தில்லா நகரை உருவாக்க நகராட்சி அதிகாரிகள் உறுதியேற்பு

பொள்ளாச்சி; 'சாலை விதிகளை கடைப்பிடிப்போம், விபத்தில்லா நகரை உருவாக்குவோம்,' என பொள்ளாச்சி நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முன், 'நான் உயிர் காவலன்' உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி கமிஷனர் குமரன் தலைமை வகித்தார். நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். சாலையில் அனைவரும் பாதுகாப்பாக இருந்தால், சாலைகள் அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்கும் என நம்புகிறேன்.வாகனத்தை இயக்கும் போது, தலைவக்கவசம் அணிவேன். சீட் பெல்ட் அணிவேன். மொபைல்போன் பயன்படுத்த மாட்டேன். சாலைவிதிகளை பின்பற்றுவேன். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட மாட்டேன். விபத்தில்லா நகரமாக மாற்ற இயன்ற அனைத்தையும் செய்வேன், என உறுதியேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை