உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முத்துாஸ் மருத்துவமனை மலுமிச்சம்பட்டியில் துவக்கம்

முத்துாஸ் மருத்துவமனை மலுமிச்சம்பட்டியில் துவக்கம்

கோவை : பத்து லட்சத்திற்கும் மேலான நோயாளிகளை, வெற்றிகரமாக சரி செய்து எலும்பு மூட்டு சிகிச்சையில் கோவையின் முதன்மை மருத்துவமனையாக, டாக்டர் முத்துாஸ் மருத்துவமனை செயல்படுகிறது.தனது கிளைகளை தொடர்ந்து விரிவாக்கம் செய்து வரும் டாக்டர் முத்துாஸ் மருத்துவமனை, தனது நான்காவது கிளையை, மலுமிச்சம்பட்டியில் துவக்கியுள்ளது. இங்கு,உலகத்தர எலும்பு மூட்டு சிகிச்சைகள் மற்றும் விபத்து, உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை, 24 மணி நேரமும் வழங்கப்படுகிறது.மருத்துவமனையின் தலைவர் டாக்டர் முத்து சரவணகுமார், டாக்டர் தீபக் மற்றும் லயன்ஸ் கிளப் கவர்னர்கள் நித்யானந்தம், சண்முகசுந்தரம், கருணாநிதி, சுரேஷ்குமார், ராஜசேகர், சார்க் நிறுவன இயக்குனர் முருகேசன் மற்றும் மலுமிச்சம்பட்டி ஊர் தலைவர்கள் சண்முகம், தங்கவேல் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை