உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மைவி3 ஆட்ஸ் நிறுவன வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம்

மைவி3 ஆட்ஸ் நிறுவன வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம்

கோவை : மைவி3 ஆட்ஸ் நிறுவன வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.கோவையை தலைமையிடமாக கொண்டு மைவி3 ஆட்ஸ் என்ற ஆன்லைன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் மட்டும் அல்லாமல் பிற மாநிலங்களிலும் இந்த ஆன்லைன் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் விளம்பரங்கள் பார்ப்பது மற்றும் பொருள்களை வாங்குவது உள்ளிட்ட பணிகளை செய்வதன் மூலம் வீட்டில் இருந்தபடியே சுலபமாக சம்பாதிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழகம் முழுவதும், லட்சக்கணக்கானோர் இந்த ஆன்லைன் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு தினமும், 100 ரூபாய் முதல், 600 ரூபாய் வரை அவர்கள் பார்க்கும் விளம்பரத்திற்கு ஏற்ப பணம் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அந்நிறுவனத்தினர் மூலம் ஹெர்பல் சார்ந்த மருந்து பொருட்களும் விற்பனை செய்யப்பட்டன. இந்நிலையில், பொதுமக்களிடம் இருந்து அதிகளவு முதலீடு பெற்றது தொடர்பாக, மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சக்திஆனந்தன் மீது, மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். கடந்த மாதம் மாநகர கமிஷனர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சக்தி ஆனந்தன் மற்றும் அவரது ஆதரவாளர்களை, ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர். சக்திஆனந்தன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சக்தி ஆனந்தன் மீதான வழக்கை, பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்ற, டி.ஜி.பி., அலுவலக வாயிலாக பொருளாதார குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை