உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தேசிய கராத்தே போட்டி அன்னுார் வீரர்கள் சாதனை

 தேசிய கராத்தே போட்டி அன்னுார் வீரர்கள் சாதனை

அன்னுார்: தேசிய கராத்தே போட்டியில், அன்னுார் வீரர்கள் சாதனை படைத்தனர். கோவை ஜி.ஆர்.டி., கலை அறிவியல் கல்லூரியில், தேசிய அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் அன்னுார் ஆலன் திலக் கராத்தே பயிற்சி பள்ளி, மாணவ, மாணவியர், ஒன்பது பேர் 11 பதக்கங்களை வென்றுள்ளனர். ஒன்பது வயது கட்டா பிரிவில் தக்சா வெண்கல பதக்கமும், கென்னிட் கேவ்ரியல் வெண்கல பதக்கமும் வென்றனர். 11 வயது பிரிவில் மைத்ரா வெள்ளி பதக்கமும், திவன்சிகா வெண்கல பதக்கமும், 13 வயது பிரிவில் லக்சன் மற்றும் மோனிஷா வெண்கல பதக்கமும் வென்றனர். 15 வயது பிரிவில் தரணிஷ் வெண்கல பதக்கம் வென்றார். குமிட்டே பிரிவில் ஏழு வயது பிரிவில் ரிதன் வெண்கலமும், 11 வயது பிரிவில் திவன்ஷிகா மற்றும் மைத்ரா வெண்கலமும், 13 வயது பிரிவில் லோனிஷா வெள்ளி பதக்கமும் வென்றனர். ஹாயா சிகா கராத்தே பயிற்சி பள்ளி மற்றும் சிட்டோ ரியோ கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் போட்டிகள் நடந்தன. சாதித்தவர்களை பயிற்சி பள்ளி தலைவர் சந்திரசேகரன், பயிற்சியாளர் ஜெயபாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ