மேலும் செய்திகள்
கால்நடை கணக்கெடுப்பு 93 சதவீதம் பணி நிறைவு
09-Mar-2025
கோவை; கோவை மாவட்டத்தில், கால்நடை கணக்கெடுப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில்,1,027 கிராமங்களில் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில், கால்நடை கணக்கெடுப்பு ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுகிறது. தேசிய அளவில் கால்நடை சார்ந்த திட்டங்கள், கொள்கைகளை வகுத்தல், நிதி ஒதுக்கீடு போன்றவற்றின் அடிப்படையில், இக்கணக்கெடுப்பு பணி நடக்கிறது. 21வது தேசிய கால்நடை கணக்கெடுப்பு பணி, 2024 அக்.,ல் துவங்கியது. கணக்கெடுப்பு பணி, மார்ச் இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏப்., 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி திட்ட துணை இயக்குனர் சுகுமார் கூறியதாவது:1046 கிராமங்களில் கணக் கெடுப்பு பணி நடத்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது வரை, 1027 கிராமங்களில் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.கால்நடை விபரங்கள், அதன் வேலைத்திறன், விவசாய தளவாட கருவிகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும், இக்கணக்கெடுப்பில் சேகரிக்கின்றோம். மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, 13.66 லட்சம் வீடுகளில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாடுகள் 4.28 லட்சமும், கோழிகள் 1.8 கோடியும் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.5,000 வீடுகளுக்கு ஒருவர் வீதம், கணக்கெடுப்பு பணியில் 234 பேர் ஈடுபட்டுள்ளனர். களப்பணியில் எடுக்கப்பட்ட தகவல்களை ஆய்வு செய்யும், இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. ஏப்., 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
09-Mar-2025