உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தேசியளவிலான டென்னிஸ் பாரதியார் பல்கலை அபாரம்

 தேசியளவிலான டென்னிஸ் பாரதியார் பல்கலை அபாரம்

அன்னூர்: தேசிய அளவிலான டென்னிஸ் போட்டியில், அன்னூர் மாணவர் உட்பட ஐந்து வீரர்கள் கொண்ட பாரதியார் பல்கலை அணி, வெண்கல பதக்கம் வென்றது. மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தில், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் கடந்த 4ம் தேதி நடந்தது. இதில் கோவை பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த அகிலேஷ் தனபாலன், தருண் விக்ரம், ரக்சத் தருண், கெவின் கார்த்திக், ரிஷிவேந்தன் ஆகியோர் அடங்கிய, ஐந்து பேர் அணி டென்னிஸ் போட்டியில் அரை இறுதியில் பங்கேற்றது. இதில் வெற்றி பெற்று, வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது. அணி வீரர்களுக்கு பல்கலை பேராசிரியர்கள், பி.எஸ்.ஜி., கல்லூரி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ