7,133 பேருக்கு புதிய ரேஷன்கார்டு
கோவை; புதிய ரேஷன்கார்டு வேண்டி விண்ணப்பம் செய்த, 7133 பேருக்கு புதிய ரேஷன்கார்டு வழங்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், 11.12 லட்சம் பேருக்கு ரேஷன்கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு புதிதாக ரேஷன்கார்டு வேண்டி, 14 ஆயிரத்து 866 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். இந்த விண்ணப்பங்கள், மாவட்ட வழங்கல் துறையால் பரிசீலனை செய்யப்பட்டு, 7133 பேருக்கு புதியரேஷன்கார்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 3190 கார்டுகள் வழங்க தயாராக உள்ளன. புதிய கார்டுதாரர்களுக்கும், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.இந்த தகவலை, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜீவரேகா தெரிவித்துள்ளார்.