உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒப்புகை சீட்டு இல்லை; கலெக்டரிடம் புகார்

ஒப்புகை சீட்டு இல்லை; கலெக்டரிடம் புகார்

கோவை; கோவையிலுள்ள சில தாலுகா தாசில்தார்களிடம் அளிக்கப்படும் மனுக்களுக்கு, குறிப்பாணையோ, ஒப்புகை சீட்டோ வழங்காமல் புறக்கணிப்பதாக, குடியிருப்போர் நலசங்கத்தினர் கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனு: மதுக்கரை தாசில்தாரிடம், ஒத்தக்கால்மண்டபம், சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட் மூன்று பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கு, குறிப்பாணை, ஒப்புகை சீட்டு வழங்கப்படவில்லை. வடக்கு தாசில்தாரிடம் கவுண்டம்பாளையம், ஆவாரம்பாளையம், கணபதி, நல்லாம்பாளையம் பகுதி மக்கள் கொடுத்த மனு மீது, நடவடிக்கை எடுக்கவில்லை. குறிப்பாணையும் தரவில்லை. இந்த நிலை மாற வேண்டும்.இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை