உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இளநீர் விலையில் மாற்றமில்லை

 இளநீர் விலையில் மாற்றமில்லை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலையை ஒப்பிடுகையில், எவ்வித மாற்றமும் கிடையாது. ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீர் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில், எவ்வித மாற்றமும் இன்றி, 29 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 12,500 ரூபாய். தேங்காய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதேநேரம், கார்த்திகை மாதம் பிறந்து, சபரிமலை ஐயப்ப தரிசனம் துவங்கி உள்ளதாலும் தேங்காய் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இச்சூழலில், இளநீர் விலையை குறைத்தால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும். எனவே, இளநீரின் விலை இந்த வாரம் குறைக்கப்படவில்லை. தற்போது, இளநீர் அறுவடை நல்ல முறையில் நடைபெற்றும் வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி