| ADDED : மார் 12, 2024 01:59 AM
கோவை:ரமலான் நோன்பு இன்று முதல் துவங்குவதாக கோவை மாவட்ட அனைத்து ஜமா அத் பிறைபார்க்கும் கூட்டத்தில் நேற்று மாலை அறிவித்தது.ரத்தினபுரி நால்வர் லேஅவுட் தாருல் குர்ஆன் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில், கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்தின் ரமலான் பிறை பார்க்கும் கூட்டம் நேற்று மாலை நடந்தது.ரமலான் பிறைபார்க்கும் கூட்டத்தின் தலைவர் ஹாஜி காஜா முஹையதீன் தலைமை வகித்தார். கோவை மாவட்ட அனைத்து ஜமாத் பொதுசெயலாளர் ஹாஜிமுஹம்மது அலி மற்றும் ஜமாஅத் முத்தவல்லி ஹாஜி கலீலுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் ரமலான் பிறை இன்று (நேற்று) தென்பட்டதால், ரமலான் நோன்பு செவ்வாய் ( இன்று) முதலாம் நோன்பாக துவங்கப்படுகிறது. நேற்று இரவு தராவீஹ் தொழுகையும், சஹர் உணவு உட்கொள்வதும் துவங்கப்பட்டது.தமிழ்நாடு தலைமைக்காஜி மவுலானா சலாவுதீன் அய்யூபி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இம்முடிவுகள் Coimbatore district jamaath Muslim Samuthayam வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலை தளங்களில் வெளியிடப்பட்டன. அனைத்து பள்ளிவாசல்களிலும் அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. என்று அறிவிக்கப்பட்டது.செயலாளர் ஹாஜி ஷாஹுல் ஹமீது, உமர்ஹத்தாப், அலிபாய் உள்ளிட்ட நிர்வாகிகளும், அனைத்து ஜமாஅத்களின் நிர்வாகிகளும், மவுலவிஅப்துல் ரஹ்மான் ஜமாலி கலந்து கொண்டனர்.