ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி
வால்பாறை; தமிழக அரசின் சார்பில், எடை குறைவாக உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி கடந்த வாரம் துவங்கப்பட்டது. வால்பாறை நகர் கக்கன் காலனியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், ஊட்டச்சத்து உறுதி திட்டத்தின் இரண்டாம் கட்ட துவக்க விழா நடந்தது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் அனீஸ் தலைமை வகித்தார். அங்கன்வாடி பணியாளர் லட்சுமி வரவேற்றார். நகராட்சி தலைவர் அழகு சுந்தரவள்ளி, துணைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, அரசு சார்பில் வழங்கப்பட்ட ஊட்டச்சத்து பெட்டகத்தை தாய்மார்களுக்கு வழங்கினர். அங்கன்வாடி பணியாளர்கள், தாய்மார்கள் கலந்து கொண்டனர்.