உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜெம் மருத்துவமனையில் உடல் பருமன் கருத்தரங்கம்

ஜெம் மருத்துவமனையில் உடல் பருமன் கருத்தரங்கம்

கோவை; ஜெம் உடல் பருமன் மற்றும் நீரிழிவு அறுவை சிகிச்சை மையம், தென் மாநிலங்களில் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்கும் மையமாக, சான்றளிக்கப்பட்ட முதல் மையம்.இம்மருத்துவமனையின், ஜெம் உடல் பருமன் மற்றும் நீரிழிவு அறுவை சிகிச்சை மையம் சார்பில், 'அளவிற்கு அப்பாற்பட்ட ஆரோக்கியம்' என்ற தலைப்பில், உடல் பருமன் மேலாண்மை குறித்த, வருடாந்திர தொடர் மருத்துவக் கல்வி கருத்தரங்கம் நடந்தது. பாலிசிஸ்டிக் கருப்பை நோய், கொழுப்பு கல்லீரல் நோய், வளர்சிதை மாற்ற நோய்க்குறி போன்றவற்றின் உடல்நல விளைவுகள், உடல் பருமனின் நோய்க்கிருமி உருவாக்கம் தொடர்பான தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது.பிரபல இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் பால், ஜெம் உடல் பருமன் மற்றும் நீரிழிவு அறுவை சிகிச்சை மையத்தின் துறைத் தலைவர் டாக்டர் பிரவீன் ராஜ் என, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை