உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசுப்பள்ளியில் படிக்கும் ஒடிசா மாணவி; தமிழ் மொழி திறனறித் தேர்வில் வெற்றி

அரசுப்பள்ளியில் படிக்கும் ஒடிசா மாணவி; தமிழ் மொழி திறனறித் தேர்வில் வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மேட்டுப்பாளையம்; ஒடிசா மாநிலத்தை பூர்விகமாக கொண்ட வெள்ளியங்காடு அரசுப்பள்ளி மாணவி தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 11ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்ச்சி பெறும் 1500 மாணவ, மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.இந்த ஆண்டிற்கான தேர்வு அக்டோபர் மாதத்தில் நடைபெற்றது. இதில் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இப்பள்ளி மாணவி ஜான்சிராணி, வெற்றி பெற்றுள்ளார். இம்மாணவி ஏற்கனவே தேசிய வருவாய் வழி மற்றும் கல்வி உதவித்தொகை தேர்வு, தமிழ்நாடு ஊரக தினறாய்வு தேர்வு, தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு போன்ற தேர்வுகளிலும் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாணவியின் பூர்வீகம் ஒடிசா. இவரது பெற்றோர் சுமார் 20 ஆண்டுகளாக இங்கேயே வசித்து வருகின்றனர். வெற்றி பெற்ற இம்மாணவியை பள்ளி முதல்வர் சாக்ரடீஸ் குலசேகரன், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் ராம்தாஸ், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் பேபி உள்ளிட்டோர் வாழ்த்தினர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி