ஒயிலாட்டம் நூறாவது அரங்கேற்றம்
அன்னுார்; அன்னுார் வட்டாரத்தில், பல்வேறு குழுக்கள் சார்பில், ஒயிலாட்டம், கும்மியாட்டம் மற்றும் கம்பத்தாட்டம் கற்பிக்கப்படுகிறது. சங்கமம் கலைக்குழு 2010ம் ஆண்டு முதல் 99 குழுக்களுக்கு ஒயிலாட்டம் கற்பித்து அரங்கேற்றம் செய்துள்ளது.அன்னுார் அருகே ஜீவா நகரில், 100வது ஒயிலாட்டம் மற்றும் கம்பத்தாட்டம் அரங்கேற்றம் நடந்தது. குழு ஆசிரியர் கனகராஜ் நாட்டுப்புற பாடல்களை இசையோடு பாடினார். அரங்கேற்றத்தில், சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்கள் என 200க்கும் மேற்பட்டோர் நாட்டுப்புறப் பாடல்களுக்கு ஏற்ப, கைகளை மேலும் கீழும் தாழ்த்தி, உயர்த்தி, கைகளில் சலங்கையை அசைத்து அற்புதமாக ஆடினர். இரவு 7:00 மணிக்கு துவங்கி இரவு 10:00 மணி வரை மூன்று மணி நேரம் ஒயிலாட்டம் மற்றும் கம்பத்தாட்டம் நடந்தது.