உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலையில் சிக்கிய ஆம்னி பஸ்

சாலையில் சிக்கிய ஆம்னி பஸ்

வடவள்ளி: வடவள்ளி -– மருதமலை சாலையில், பாதாள சாக்கடை குழாய் பதித்த சாலையில், தனியார் ஆம்னி பஸ் சிக்கியது. வடவள்ளி சுற்றுப்பகுதியில் நேற்று மாலை முதல் கனமழை பெய்தது. மாநகராட்சி சார்பில், மருதமலை சாலையில் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மருதமலை அடிவாரத்தில் இருந்து சென்ற தனியார் ஆம்னி பஸ், வடவள்ளி, திருவள்ளுவர் நகர் பஸ் ஸ்டாப் அருகே, பாதாள சாக்கடை குழாய் பதித்த இடத்தில் சிக்கியது. ஒரு மணி நேரம் போராடி, பஸ் மீட்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி