உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கூடுதல் நேரம் மின்வெட்டு; மக்கள் அதிருப்தி

 கூடுதல் நேரம் மின்வெட்டு; மக்கள் அதிருப்தி

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சுற்றுப்பகுதிகளில் அறிவிக்கப்பட்ட நேரத்தை விட, கூடுதல் நேரம் மின் வெட்டு செய்யப்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். கிணத்துக்கடவு துணை மின் நிலையம் சுற்றுப்பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மாதம் ஒருமுறை காலை, 9:00 முதல் மாலை, 4:00 வரை மின்தடை செய்யப்படுகிறது. இதில், 20 முதல் 25 கிராமங்களுக்கு மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. மின் தடை நாளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்படுகிறது. ஒரு சில கடைகள் மாலையில் திறக்கப்படுகின்றன. இந்நிலையில், அறிவிக்கப்பட்ட நேரத்தை விட, 2 மணி நேரம் கூடுதலாக மின்வெட்டு நிலவுகிறது. இதனால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். பொதுமக்கள் கூறியது : மின்தடை நாளில், காலை நேரத்தில் சரியாக, 9:00 மணிக்கு மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. ஆனால், மாலையில் குறிப்பிட்ட நேரத்தில் மின் வினியோகம் வழங்குவதில்லை. இதனால் குடிசைத் தொழிலில் ஈடுபடும் மக்கள், குடியிருப்பு வாசிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மாதமும், இரண்டு மணி நேரம் தாமதமாகவே மின் வினியோகம் செய்யப்படுகிறது. இனி வரும் காலங்களில் இது போன்று நடக்காமல் மின்வாரியத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது மின்தடை நேரத்தில் அதிகரித்து முறைப்படி முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை