உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பால் உற்பத்தியில் பாலக்காடு முதலிடம் ;பால் வள மேம்பாட்டு துறை இயக்குனர் தகவல்

பால் உற்பத்தியில் பாலக்காடு முதலிடம் ;பால் வள மேம்பாட்டு துறை இயக்குனர் தகவல்

பாலக்காடு;கேரள மாநிலத்தில், பால் உற்பத்தியில் பாலக்காடு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது என, பால் வள மேம்பாட்டு துறை இயக்குனர் பிந்து கூறினார்.கேரள மாநிலம், பாலக்காடு பால் உற்பத்தியாளர்கள், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக நாள் ஒன்றுக்கு சராசரியாக, 3 லட்சம் லிட்டருக்கும் அதிகமான பால் உற்பத்தி செய்து சிறந்து விளங்குகின்றனர்.கடந்த, 2018 - 19ம் ஆண்டில், சராசரி தினசரி பால் உற்பத்தி, 2.8 லட்சம் லிட்டர். 2020 - -21, 2021 - -22, 2022 - -23 ஆண்டுகளில் முறையே 3.05, 3.14, 3.04 லட்சம் லிட்டர் பால் தினமும் சராசரி உற்பத்தியாக இருந்தது.இதுகுறித்து, மாநில பால் வள மேம்பாட்டு துறை இயக்குனர் பிந்து கூறியதாவது:விவசாயத் துறையில் ஏற்பட்ட நெருக்கடியின் போது, பால் துறையில் கிடைத்த கூடுதல் வருமானம் விவசாயிகளுக்குத் துணையாக இருந்தது. கேரள மாநிலத்தில், பால் உற்பத்தியில் பாலக்காடு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. பாலக்காட்டில் பால் பண்ணையாளர்கள் அதிகமுள்ளது சித்துார் தாலுகாவாகும். இந்த தாலுகாவில், தினமும் பால் கொள்முதல் சராசரியாக, 1.29 லட்சம் லிட்டர் ஆகும். மாவட்டத்தில், 60 குழுக்களில் 6,000க்கும் மேற்பட்ட பால் பண்ணையாளர்கள் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.2021- - 22ம் ஆண்டில் வளர்ச்சித் திட்டங்களுக்காக பால் வள மேம்பாட்டு துறை, 6.07 கோடி ரூபாய் ஒதுக்கியது. 2022 - 23ல், 7.20 கோடி ரூபாய் ஒதுக்கியது. தீவன சாகுபடிக்கான நோடல் ஏஜென்சியான பால் வள மேம்பாட்டுத் துறை, 325 ஏக்கர் நிலத்தில் புல் தோட்டங்கள் அமைத்துள்ளன. இதற்காக, 76.49 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள இரண்டு பால் பண்ணைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. கடந்த நிதியாண்டில் உள்ளாட்சி அமைப்புகள் பால் வள துறைக்கு, 9.49 கோடி ரூபாய் செலவிட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ