| ADDED : மார் 13, 2024 01:31 AM
மேட்டுப்பாளையம்;கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மருதுார் ஊராட்சியில் பல இடங்களில் குப்பைகள் அகற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது என தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து நேற்று மருதுார் ஊராட்சி தலைவர் பூர்ணிமா, செயலர் லட்சுமணன் முன்னிலையில் அவசரக்கூட்டம் நடந்தது. இதுகுறித்து ஊராட்சி தலைவர் பூர்ணிமா கூறுகையில், மருதுார் ஊராட்சியில் வார்டு வாரியாக மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை மக்களிடம் இருந்து வாங்க சுமார் 16 பேர் உள்ளனர். வடிகால்களில் அடைப்புகளை அகற்றுதல், புற்கள் வெட்டுதல் என 3 பேர் உள்ளனர். துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது.இக்கூட்டத்தில் புதிதாக துாய்மை பணியாளர்களை நியமித்தல், காலை 7மணி முதல் 11 மணி வரை துாய்மை பணிகளை துாய்மை பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து துாய்மை பணியாளர்களும் ஒருங்கிணைந்து தினம் ஒரு கிராமத்தில் துாய்மை பணிகளை மேற்கொள்ளுதல், வார்டு உறுப்பினர்கள் அதனை கண்காணித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, என்றார்.