உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள்; கண்டுகொள்ளாத ஊராட்சி செயலர்

வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள்; கண்டுகொள்ளாத ஊராட்சி செயலர்

போத்தனூர்: ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சியின், 12வது வார்டில் நடராஜ் என்பவரின் வீட்டின் முன், 23 அடி அகலமுள்ள சாலையில் மரங்கள் வளர்க்கப்பட்டன. இங்குள்ள ஐந்து மரங்கள் சில வாரங்களுக்கு முன் வெட்டி அகற்றப்பட்டன. அதுபோல், மயிலேறிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட திருமுருகன் நகர் தனியார் கல்லூரி ஒன்றின் எதிரே செல்லும் சாலையின் இறுதியிலும், அதனருகே ரிசர்வ் சைட்டிலிருந்த மரங்களும், நேற்று முன்தினம் வெட்டி அகற்றப்பட்டன. மரங்களை வெட்டிய தொழிலாளிகளிடம் கேட்டபோது, நடராஜ் என்பவர் கூறியதால் வெட்டுகிறோம் என்றனர். இதுகுறித்து, மயிலேறிபாளையம் ஊராட்சி செயலர் புவனேஸ்வரியிடம் கேட்டபோது, ''மரங்கள் வெட்டப்படுவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஒருவேளை வி.ஏ.ஓ., அனுமதி கொடுத்திருக்கலாம். நான் நேரில் சென்று பார்வையிடுகிறேன், என்றார். பார்வையிட்ட பின் விபரங்களை தெரிவிப்பதாக கூறினார். நேற்று மதியம் வரை அழைக்கவில்லை. நாம் மீண்டும் அழைத்தபோதும், அழைப்பை ஏற்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை