உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  துவங்கியது குழாய் சீரமைப்பு பணி

 துவங்கியது குழாய் சீரமைப்பு பணி

போத்தனூர்: கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட, 15 க்கும் மேற்பட்ட வார்டுகளில், ஆழியாறு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பிரதான குழாய் கோவை -பொள்ளாச்சி மற்றும் மதுக்கரை மார்க்கெட் சாலைகள் வழியே செல்கிறது. இதில் மதுக்கரை மார்க்கெட் சாலையில் செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் நீர் வீணாக வழிந்தோடுகிறது. இதுகுறித்து நேற்று நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக குடிநீர் வடிகால் வாரியத்தினர் நேற்று காலை அதிகளவு நீர் தேங்கியுள்ள பேக்கரி ஒன்றின் முன் காணப்படும் குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பிற இடங்களிலுள்ள உடைப்புகளும் நாளைக்குள் (இன்று) சீரமைக்கப்படும் என, பணியில் ஈடுபட்டோர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை