கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் (சி.டி.சி.ஏ.,) சார்பில் மூன்றாவது டிவிஷன் போட்டி எஸ்.ஆர்.ஐ.சி.சி., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. கோவை காம்ரேட்ஸ் அணியும், யங் பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. கோவை காம்ரேட்ஸ் அணியினர், 26.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 89 ரன் எடுத்தனர். எதிரணி வீரர்களான சரண்ராஜ் ஆறு விக்கெட், மதன் குமார் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர். யங் பிரண்ட்ஸ் அணியினர், 18.3 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 91 ரன் எடுத்தனர். வீரர் ரூபக் குமார், 56 ரன் எடுத்தார். எதிரணி வீரர் ரோகித் ராம் மூன்று விக்கெட் வீழ்த்தினார். முதலாவது டிவிஷன் போட்டியில், சூர்யபாலா கிரிக்கெட் கிளப் அணியும், கோவை நைட்ஸ் அணியும் மோதின. சூர்யபாலா கிரிக்கெட் கிளப் அணியினர், 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 145 ரன் எடுத்தனர். வீரர் முகேஷ், 37 ரன் எடுத்தார். எதிரணி வீரர் செல்வகுமரன் மூன்று விக்கெட் வீழ்த்தினார். கோவை நைட்ஸ் அணியினர், 25 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு, 148 ரன் எடுத்தனர். வீரர் கிேஷார், 38 ரன், ஜிதேந்திரகுமார், 35 ரன் எடுத்தார். இரண்டாவது டிவிஷன் போட்டியில் திருப்பூர் கிரிக்கெட் அணியும், காஸ்மோ வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியும் மோதின. திருப்பூர் கிரிக்கெட் கிளப் அணியினர், 50 ஓவரில் எட்டு விக்கெட் இழப்புக்கு, 205 ரன் எடுத்தனர். வீரர்கள் அரவிந்த், 52, ராகவன், 39, நிதர்சன், 36, ராஜாராம், 30 ரன் எடுத்தனர். காஸ்மோ வில்லேஜ் அணியினரோ, 21.1 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து, 78 ரன் மட்டுமே எடுத்தனர். எதிரணி வீரர் ஜீவன் ஆறு விக்கெட்டும், விஜயராஜ் நான்கு விக்கெட்டும் வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.